தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட போது விமர்சித்து ராகுல் வெளியிட்ட பதிவு - தற்போது இணையத்தில் வைரல்!
மத்திய அரசால் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதனை விமர்சித்து ராகுல் X தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது. இந்த சட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இதையும் படியுங்கள் : 2 ஆண்டுகளில் பதிவு செய்த 2.38 லட்சத்தில் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! எங்கு தெரியுமா?
இந்த சட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமான கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ 1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம். தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தேவையில்லை.
இதையடுத்து, இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது. தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், "தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நிதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார். தேர்தல் பத்திரம் குறித்து எக்ஸ் தளத்தில் 2019 -ஆம் ஆண்டு ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு; "புதிய இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன் தேர்தல் பத்திரம் என்று அழைக்கப்படுகின்றது." என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
In “New” India, bribes & illegal commissions are called Electoral Bonds. https://t.co/mYl5OxcVLU
— Rahul Gandhi (@RahulGandhi) November 18, 2019