Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் நடத்தை விதிமீறல் - பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

12:36 PM Apr 25, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகளை பறித்து அவற்றை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கும் பகிர்ந்து அளித்து விடும். பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கூட கணக்கிட்டு காங்கிரஸ் பிரித்து கொடுத்து விடும் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக ராகுல் காந்தி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த புகார்களின் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பாஜக தலைவர் நட்டாவும் பதிலளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கட்சித் தலைவர்களின் பேச்சு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
BJPCongressElection commissionMuslimsnoticePM ModiRahul gandhi
Advertisement
Next Article