“பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!" - ஆ.கோபண்ணா எழுதிய தேர்தல் பிரச்சார கையேடு வெளியீடு!
“பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!" என்ற தலைப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய தேர்தல் பிரச்சார கையேடு இன்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணை தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய ‘பாசிசம் வீழட்டும், இந்தியா மீளட்டும்’ என்ற தேர்தல் பிரச்சார நூல் வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்து, தேர்தல் பிரச்சார நூலை வெளியிட்டார்.
இந்த தேர்தல் பிரச்சார நூல் வெளியீட்டு விழாவில், மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், சென்னை மாநகராட்சி குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், டில்லி பாபு, மாநில செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, பி.வி.தமிழ்செல்வன், இலக்கிய அணி தலைவர் புத்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : பாஜக எம்பி நவ்நீத் ராணா சாதி சான்றிதழ் வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்த தேர்தல் பிரச்சார கையேட்டில் பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களுக்கு எதிரான அநீதிகள், பாஜகவினர் செய்த ஊழல்கள், தேர்தல் பத்திர முறைகேடுகள் பற்றிய முழு விவரமும் இடம் பெற்றுள்ளது.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள சில விவரங்கள் பின்வருமாறு.
- மோடியின் நிறைவேற்றாத வாக்குறுதிகள்
- கருப்புப் பணம் ஒழிப்பு
- ஜி.எஸ்.டி. பாதிப்புகள்!
- இந்தியாவின் கடன் சுமை
- வேலையில்லாத் திண்டாட்டம்
- பெட்ரோல் டீசல் விலை உயர்வு
- விவசாய விரோதச் சட்டங்கள்
- வேளாண் சட்டங்கள் எதிர்ப்புப் போராட்டம்
- பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
- சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் முடக்கம்
- வெள்ள நிவாரணநிதி மறுப்பு
- மீனவர்கள் வாழ்வாதாரத்தைச் சீரழித்த பாஜக
- மேகதாதுவில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக
இவ்வாறு 54 தலைப்புகள் கையேட்டில் இடம் பெற்றுள்ளன.