Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் 2024 : கருத்துக் கணிப்புகள் - பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் நிலை என்ன..?

10:06 PM Feb 08, 2024 IST | Web Editor
Advertisement

சிவோட்டர்ஸின் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில்  பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் நிலை என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.

மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும்  மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA - கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை INDIA - கூட்டணி திமுக தலைமையில் களம் இறங்குகிறது.

இந்த நிலையில் ‛மூட் ஆப் தி நேஷன்' என்ற தலைப்பில் ‛இந்தியா டுடே' மற்றும் ‛ சி வோட்டர்ஸ்' இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு டிச.,15 முதல் 2024 ஜன.,28 வரை 35,801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதன்படி முடிவுகள் வெளியாகியுள்ளன.

சி-வோட்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளின்படி கிட்டத்தட்ட பெரும்பான்மை இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் என்பது தெளிவாகியுள்ளது. இதன் படி மொத்தமாக 301 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 71 இடங்களை இந்தியா கூட்டணி பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் எதிர்கட்சிகள் பிடித்துள்ள இடங்களை குறித்து விரிவாக காணலாம்.

மேற்கு வங்கம் : 

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை  -42
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி – 22
தேசிய ஜனநாயக கூட்டணி  – 19

கர்நாடகா

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை – 28
தேசிய ஜனநாயக கூட்டணி-24
இந்தியா கூட்டணி -4

ஜார்க்கண்ட்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 14
தேசிய ஜனநாயக கூட்டணி -12
இந்தியா கூட்டணி – 2

பஞ்சாப்

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -13
தேசிய ஜனநாயக கூட்டணி -02
ஆம் ஆத்மி -05
காங்கிரஸ் -05
அகாலிதளம் -01

ஆந்திர பிரதேசம்  

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை –  25
தெலுங்கு தேசம் கட்சி 17
ஓய்எஸ்ஆர்சிபி – 08

தெலங்கானா

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 17
இந்தியா கூட்டணி -10
தேசிய ஜனநாயக கூட்டணி – 03
பி.ஆர்.எஸ்.,–03
ஏஐஎம்ஐஎம் -01

டெல்லி :

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை :07
தேசிய ஜனநாயக கூட்டணி – 07

கேரளா : 

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 20
இந்தியா கூட்டணி -20

தமிழ்நாடு

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 39
இந்தியா கூட்டணி - 39

சிவோட்டர்ஸின் முடிவுகளின் படி பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகள் இணைந்து 140 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது.

 

Tags :
C VotersC Voters Surveyelection 2024Election2024INDIA AlliancendaNon Bjp Ruling StatesParliamentary Election 2024
Advertisement
Next Article