For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி - மகாராஷ்டிரா சபாநாயகர்

09:54 PM Jan 10, 2024 IST | Web Editor
ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி   மகாராஷ்டிரா சபாநாயகர்
Advertisement

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி என மகாராஷ்டிரா சட்டபேரவைத் தலைவர்  ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் இன்று தனது முடிவை அறிவித்தார். அதன்படி
ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா கட்சி என்று  சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் நர்வேகர் தெரிவித்ததாவது..

"உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, யார் உண்மையான அரசியல் கட்சி என்பதை தீர்மானித்துள்ளேன். எந்த அணியினர் உண்மையான அரசியல் கட்சி என்பது சட்டப்பேரவை பெரும்பான்மையை வைத்து முடிவு செய்யப்படும். அந்தவகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சட்டப்பேரவை பெரும்பான்மை உள்ளது.

ஆகவே, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்ற ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா கட்சியாகும். ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது." என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவரின் இந்த முடிவையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான  அணியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தை நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பு  சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement