For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் - #KarnatakaGovt அதிரடி!

07:47 PM Aug 14, 2024 IST | Web Editor
அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட்    karnatakagovt அதிரடி
Advertisement

கர்நாடகா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை பரிமாறிவிட்டு, பின் ஊழியர்களே முட்டையை எடுத்துச்சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

தமிழ்நாட்டில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இது, பிற மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் இந்த நடைமுறை அமலில் உள்ளது. அதன்படி, கர்நாடகாவின் குண்டூர் கிராமத்தில் உள்ள ஓர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டது. இதனை ஊழியர்கள் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர்.

அந்தக் குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்தனர். பிறகு தட்டில் இருந்த முட்டைகளை குழந்தைகள் சாப்பிடும் முன்பே அங்கிருந்த ஊழியர் வேகவேகமாய் எடுத்து விடுகிறார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது, "தவறு செய்த அங்கன்வாடி ஊழியர்கள் லட்சுமி, ஷைனஜா பேகம் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு அவர்களை சென்றடைகிறதா என்பதை கண்டறிவதற்காகவே புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற நடைமுறைகளை அமல்படுத்தினோம். இப்போது அதன் மூலமாகவே இத்தகைய செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Eggs given to children... employees lifted after taking photo - #Karnataka Govt action!உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அங்கன்வாடி மையங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கர்நாடகாவில் 69,000 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இதில் ஒரு குழந்தையின் உணவுக்காக மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ரூ.8 வழங்குகிறது. விலைவாசி உயர்ந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் ரூ.8க்கு சத்தான உணவை வழங்க முடியுமா என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியுள்ளது.

9 ஆண்டுகளாக இந்தத் தொகை உயர்த்தப்படவில்லை. எனவே மத்திய அரசும், மாநில அரசும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த தொகையை உடனடியாக உயர்த்த வேண்டும். கர்நாடக அரசு குழந்தைகளுக்கு தினமும் முட்டை, பால் வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. கதவு, நாற்காலி, வகுப்பறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தி வருகிறோம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement