For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்வியே ஆயுதம்...! சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!

11:52 AM May 06, 2024 IST | Web Editor
கல்வியே ஆயுதம்     சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்
Advertisement

நாங்குநேரியில் கடந்த ஆண்டு சாதி ஆணவத்தால் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

Advertisement

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி.  இவரது மனைவி அம்பிகாபதி.  முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார்.  இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும்,  14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.  இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தனர்.  இவர்களது வீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் 3 பேர் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.  இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர்.

விசாரணையில் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது.  இந்த கொடூர நிகழ்வு தமிழ்நாட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியது.

இதனிடையே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்ட நாள் சிகிச்சை பெற்ற நிலையில் 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.  இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வை எழுதிய மாணவர் சின்னத்துரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி அசத்தியுள்ளார்.

இதன்படி சின்னத்துரை பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:

தமிழ்                                                     - 71

ஆங்கிலம்                                          - 93

பொருளாதாரம்                            - 42

வணிகவியல்                                  - 84

கணக்குப்பதிவியல்                   - 85

கணிப்பொறி பயன்பாடு       - 94

மொத்தம்     - 469

தனக்காக தேர்வு எழுத வந்த உதவியாளரிடம்  நான் எனக்கு தெரிந்த பதிலை சொல்கிறேன் - அதையே எழுதுங்கள்.  எனக்கு உதவி செய்வதாக நினைத்து நீங்களாக எதையும் எழுத வேண்டாம் என அன்பு வேண்டுகோளை மாணவர் சின்னதுரை முன்வைத்திருக்கிறார்.
என்னால் என்ன முடிகிறது என்பதை நான் மதிப்பிடவே விரும்புகிறேன் என கூறி சாதித்துள்ளார் மாணவர் சின்னதுரை.
Tags :
Advertisement