Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
08:42 PM Nov 07, 2025 IST | Web Editor
தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

"சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை எண். 23, 15.9.2025 அன்று வெளியிடப்பட்ட பின்னும், இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? எனவே, உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKCMStalinDMKEPSlatestNewsTNnews
Advertisement
Next Article