ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
08:19 PM Oct 06, 2025 IST
|
Web Editor
Advertisement
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
Advertisement
இதனை தொடர்ந்து, ராமதாஸின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Article