"எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்" - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் பகுதியில் 56 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் விடுதி கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
56 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் மாதிரி பள்ளி கட்டிடம் மற்றும் மாணவர்கள் விடுதி, மாணவிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்து மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், ஆய்வக வசதிகள் உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், "தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை செய்தார், கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மைய கருத்தாக உள்ளது.
அந்த வகையில் இந்தியாவிலேயே உயர்கள்ளியின் முக்கியத்துவத்தை தமிழகம் பெற்றுள்ளதாகவும், மாணவர்கள் சிறந்து விளங்கினால் தான் மேல்நிலைக் கல்வியில் முதலிடம் பெற முடியும். குறிப்பாக 56 கோடியே 47 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம், மாணவர்கள் தங்கும் விடுதி, மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும், 95 சதவீத பணிகள் தற்போது முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் விரைவில் இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைப்பார்.
மேலும் 22 பள்ளி அறைகள், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வகங்கள் இந்த கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாரத பிரதமர் மோடி வருகை குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தவர், "கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து பாரத பிரதமர் தமிழில் உரையாற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். கனவு காண்பதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது, கனவு காண்பது அவர்
அவர்களின் விருப்பம். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். 2026ல் திமுக தலைமையிலான ஆட்சி தான் அமையும் என நடுநிலையாளர்கள் தெரிவித்து வருவதாக கூறினார்.