Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

06:54 AM Jul 16, 2024 IST | Web Editor
Advertisement

மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 4.83 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :

"நாடாளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்திருக்கிறார். மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த திமுக அரசுக்கு?. சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்" என்று மேடைதோறும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்யவில்லை. சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறார்.

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம். மக்களை வாட்டி வதைப்பதே இந்த திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற முதலமைச்சசர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
AIADMKEdappadi palanisamyElectricityEPSprice hikeTN GovtTNEB
Advertisement
Next Article