சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா
மற்றும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கு டிடிவி.தினகரனுக்கு கட்சி நிர்வாகிகள் கிரேன் மூலம் ஒரு டன் மாலை அணிவித்து வரவேற்றனர். அதன் பின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின் திருமண விழாவில் டி.டி.வி. தினகரனுக்கு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை தோற்கடித்து வெற்றி பெற வேண்டி வேல் பரிசாக வழங்கினர்.
இதையும் படியுங்கள் ; பட்ஜெட் கூட்டத்தொடர் – மக்களவையில் இருந்து I.N.D.I.A. கூட்டணி வெளிநடப்பு!
இதையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"ஜனநாயக நாட்டில் கட்சி அமைப்பது தேர்தலில் போட்டியிடுவது அவரவர் விருப்பம்
அவர்களை வெற்றி பெற செய்வது மக்கள் கையில் தான் உள்ளது. நடிகர் விஜய் கட்சி
ஆரம்பிப்பது குறித்து கருத்து சொல்வது நாகரீகம் இல்லை. எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுகிறார். சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை வைத்து ஜெயித்து விடலாம் என எண்ணுகிறார் இந்த தேர்தலில் சிறுபான்மையினர் தக்க பாடம் புகட்டுவார்கள்"
இவ்வாறு அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.