சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள மாண்புமிகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.