சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கேட்ட எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 14ஆம் தேதி 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மார்.15ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று
சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து குற்றம் சாட்டினார்.
அன்பில் மகேஸ் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து பேச சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் 3, 4 முறை கையை உயர்த்தினார். ஆனால் சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனுக்காக வாய்ப்பு கேட்டார்.
கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே மோதல் நிலவுவதாக பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் இபிஎஸ் செங்கோட்டையனுக்கு குரல் கொடுத்தது குறிப்பிடதக்கதாக பார்க்கப்படுகிறது.