4குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட 5 பேர்கைது! - #Edappadi -ல் பரபரப்பு!
எடப்பாடி அருகே 4 - குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சித்தூர் திம்மபதியான்வளவு, பகுதியைச் சேர்ந்த சேட்டு மற்றும் குண்டுமல்லி, என்ற தம்பதியினர் கரும்பு வெட்டும் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 5 குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் இரண்டு குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் குடும்ப வறுமையால் தவித்த சேட்டு தனது இரண்டு பெண் குழந்தைகளை புரோக்கர் மூலம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும். 1 ஆண் குழந்தையை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையையும் விற்பனை செய்வதற்காக குழந்தைகள் விற்பனை செய்யும் புரோக்கர்களான எடப்பாடி பகுதியைச் சேர்ந்த செந்தில் முருகன், மற்றும் ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி, ஆகியோரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ், என்பவருக்கு ஆண் குழந்தை தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள் : நடிகர் பிரபாஸின் #Sprit திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் தம்பதி!
அவரை சந்தித்து பேசியவுடன் குழந்தைக்கு ரூ. 1 லட்சம் தருவதாகவும், குழந்தையை முறைப்படி தத்து கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சேட்டு மறுப்பு தெரிவித்ததால், தேவராஜ் என்பவர் சேலம் மாவட்டம் குழந்தைகள் நல அலுவலர் ஸ்ரீ முரளிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் சேட்டுவை பிடித்து விசாரித்தனர். அப்போது சட்டவிரோதமாக ஏற்கனவே மூன்று குழந்தைகளை புரோக்கர்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சேட்டுவை கைது விசாரணை நடத்தியதில் குழந்தைகள் விற்பனை செய்யும் புரோக்கர்களான செந்தில்முருகன், முனுசாமி,உட்பட இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், காவல்துறையினர் சேட்டுவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது தப்பி ஓடிய சேட்டுவை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் கைது செய்தனர். மேலும், மற்ற குழந்தைகளை விற்பனை செய்த இடைத்தரர்களான பாலாமணி, தமிழ்செல்வன், லோகாம்பாள், என மொத்தம் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேறு எங்கெல்லாம் குழந்தைகள் விற்பனை செய்து உள்ளனர் என்பது போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய பின்னர் ஆறு பேரையும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.