டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற ED ரெய்டு நிறைவு - சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் பேட்டி
டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆஜராக இருந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் சுங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் நேற்று தொடங்கிய அமலாக்கத்துறையினரின் சோதனை இன்று அதிகாலை நிறைவு பெற்றது.
இதையும் படியுங்கள் : காற்று மாசுபாடு எதிரொலி - டெல்லியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை; வாகனங்களை இயக்க கடும் கட்டுப்பாடு
இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், சோதனை என்பது மக்களை தொந்தரவு செய்யும் போக்கு என தெரிவித்தார். அமலாக்கத்துறையின் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், நாட்டில் உண்மையை செல்வதும், ஏழை மக்களுக்கு சேவை செய்தும் பாவம் என தாம் உணர்வதாக குறிப்பிட்டார்.