கள்ளக்குறிச்சியில் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்!
கள்ளக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து கிராம மக்கள் விஏஓ, தாசில்தார், வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகரிக்கள் நில அதிர்வு குறித்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும், நில அதிர்வு உணரப்பட்ட கிராமத்தில் இருக்கும் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது என்பது குறித்தும் எதனால் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.