ஊட்டி, கொடைக்கானல் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் இ பாஸ் இன்று முதல் கட்டாயம்!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் ஊட்டி கொடைக்கானல் என மலை பிரதேசங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் ஊட்டி கொடைக்கானலுக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
என் காரணமாக உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த இ- பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வடக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 7ஆம் தேதி முதல் ஊட்டி கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்ட அதற்கான இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் epass.tnega.org என்ற இணையதளத்தில் இபாசுக்கு விண்ணப்பிக்கலாம். வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பயணிகள் தங்கள் மொபைல் எண் வைத்து இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் இமெயில் முகவரியை வைத்து இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த நடைமுறை இன்று முதல் நமக்கு வந்துள்ளதால் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் அனைத்து வெளி மாவட்ட, வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்பது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.