இ-பாஸ் குழப்பம் | கொடைக்கானலில் குறைந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை!
கோடை விடுமுறை தொடங்கிய நாளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வந்த நிலையில், இ-பாஸ் குழப்பத்தால் இன்று பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளதோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி மே 7-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும். அதன் பிறகு இன்று மாலை முதல் இ பாஸ் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என
இந்நிலையில், கோடை விடுமுறை தொடங்கிய நாளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வந்த நிலையில், இ-பாஸ் குழப்பத்தால் இன்று பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கப்படுவதோடு, ஒரு வாகனத்திற்கு ஒரு இபாஸ் மட்டுமே போதுமானது. இதனையடுத்து உள்நாட்டை சேர்ந்தவர்கள் தங்களுடைய தொலைபேசி நம்பரை பதிவு செய்தும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு பேருந்தில் நீலகிரிக்கு வருபவர்களுக்கும், உள்ளூர் வாகனங்களுக்கும் இ-பாஸ் அவசியமில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.