“துரைமுருகனின் 'சாட்டை'க்கும், கட்சிக்கும் தொடர்பில்லை” - சீமான் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
06:41 PM Apr 15, 2025 IST | Web Editor
Advertisement
அண்மைக் காலமாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் விலகி கொண்டிருக்கின்றனர். கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியாக பார்க்கப்படும் துரைமுருகனுக்கு எதிராக சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
Advertisement
“திருச்சி துரைமுருகன் நடத்தும் "சாட்டை" வலையொளிக்கும் (YouTube Channel), நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமேடைப் பேச்சுகளால் அடிக்கடி சாட்டை துரைமுருகன் சர்ச்சைகளில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.