For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி?

02:26 PM Feb 12, 2024 IST | Web Editor
2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி
Advertisement

திருச்சியில் போட்டியிடுவது குறித்து கூட்டணி தலைமை முடிவெடுக்கும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

Advertisement

மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் இன்று (பிப். 12) நடைபெற்றது. அதற்கு திருச்சி,  தஞ்சாவூர்,  பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது.  அந்த நிதியளிப்பு கூட்டத்தில் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.  அந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள் ; வரும் 22-ம் தேதி வரை சட்டப் பேரவைக் கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

இது குறித்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியதாவது: 

"சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை.  கூட்டம் தொடங்கும் போதே தேசிய கீதம் பாடவில்லை என கூறுவது முரண்பாடான விஷயம்.  சட்ட சபை மரபின்படி தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கும் முடியும் போது தான் தேசிய கீதம் பாடப்படும்.

கடந்த முறை சட்டசபையில் தேசிய கீதம் வாசிக்கும் முன்பாக ஆளுநர் மதிக்காமல் சென்றார்.  சென்ற முறை உரையில் காமராஜர்,  அண்ணா,  தந்தை பெரியார்,  அம்பேத்கர், கலைஞர் பெயரை தவிர்த்து விட்டு வாசித்தார்.  அவர் தான் மரபை மீறி நடந்து கொண்டார்.

இனி வர கூடிய காலங்களில் ஆர்.எஸ்.எஸ் கொடி ஏற்றி ஆர்.எஸ்.எஸ் ஷ்லோகம் வாசிக்க சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை.  ஆர்.என்.ரவிக்கு ஆளுநருக்கான தகுதி இல்லை, ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு செயலாளராக இருக்க தான் அவருக்கு தகுதி இருக்கிறது. மத்திய அரசு பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு இணை அரசை நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து கூட்டணி குறித்து எழுந்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது; 

திமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம் கூட்டணியின் சார்பில் தான் போட்டியிடுவோம்.  மதவாத பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.  திமுக உடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முழு திருப்திக்கரமாக தான் நடந்தது.  எங்கள் கட்சியில் ஒரு மக்களவை உறுப்பினரும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இருக்கிறார்கள்.  தற்போது கூடுதலாக ஒரு மக்களவைக்கு தொகுதியில் சீட்டு கேட்டு இருக்கிறோம்.  மேலும், திருச்சியில் நான் போட்டியிடுவது குறித்து எங்கள் கூட்டணி தலைமை முடிவெடுக்கும்.

இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் தவிர மற்ற அனைத்து கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.  ஒரு சில மாநிலங்களில் சில கட்சிகள் இடையே முரண்பாடு இருக்கிறது ஆனால் குறைந்தபட்ச புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது"  இவ்வாறு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement