மிசோரத்தில் ரூ. 66 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் !
மியான்மருடன் இந்திய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிசோரத்தின் சம்பய் மாவட்டம் போதைப் பொருள்கள் கடத்தல் அதிகம் நடக்கும் பகுதியாகும். இங்கு, அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் கடந்த மார்ச் 1 ம் தேதி சோகாவ்தார் பகுதியில் ரூ. 60.62 கோடி மதிப்பிலான 20.20 கி அளவுள்ள மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக கிடைத்த தகவல்களின்படி சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதிகாரிகள் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அடுத்ததாக அந்தப் பகுதிக்கு அருகிலேயே ரூ. 6 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர். பாதுகபபுப் படையினரைப் பார்த்ததும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். இதை அடுத்து பிடிபட்ட போதைப் பொருள்களை போலீசார் காவல்நிலையத்தில் கொண்டு சென்றனர்.
மியான்மரில் இருந்து கடத்தப்படும் போதை பொருட்கள் பெரும்பாலும் வங்கதேசத்துக்கு எடுத்து செல்லபடும் வழியில் மிசோரம், அஸ்ஸாம் வழியாக திரிபுராவிற்கு வருகின்றன. இந்தியா, வங்கதேசத்தின் குறிப்பிடத்தக்க எல்லை பகுதிகள் வேலியிடப்பட்டிருந்தாலும் மியான்மருடனான எல்லை பகுதிகள் பெரும்பாலும் திறந்த நிலையிலேயே உள்ளது சட்டவிரோத கடத்தலுக்கு உதவுகிறது என்று அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.