For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

100 நாளில் ’உக்ரம்’ என்ற புதுவகை ரைஃபிள் துப்பாக்கியை தயாரித்த டிஆர்டிஓ!

10:23 AM Jan 10, 2024 IST | Web Editor
100 நாளில் ’உக்ரம்’ என்ற புதுவகை ரைஃபிள் துப்பாக்கியை தயாரித்த டிஆர்டிஓ
Advertisement

100 நாட்களில் டிஆர்டிஓ அமைப்பு 4 கிலோ எடை கொண்ட ‘உக்ரம்’ என்ற துப்பாக்கி வகையை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.

Advertisement

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) 100 நாட்களுக்குள் 'உக்ரம்' என்ற ரைஃபிள் வகை துப்பாக்கியை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனர். இந்த மேம்பாட்டு அமைப்பின் ஒரு பிரிவான ஆர்மமென்ட் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் (ARDE) மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான டிவிபா ஆர்மர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த துப்பாக்கியை உருவாக்கியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கி 7.62 மிமீ அளவுள்ள சுற்றுகளை பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது 5.62 மிமீ காலிபர் ரவுண்டுகளை பயன்படுத்தும் ரைஃபிள்களை விட சக்தி வாய்ந்தது. இது INSAS துப்பாக்கி போன்றது. இந்தியாவில் துணை ராணுவப் படைகள் உட்பட ஆயுதப் படைகளால் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

4 கிலோ எடை கொண்ட இந்த துப்பாக்கி 500 மீட்டர் அல்லது தோராயமாக ஐந்து கால்பந்து மைதானங்கள் அளவுக்கு வரம்பைக் கொண்டிருக்கும். ரைஃபிளில் 20 ரவுண்டுகள் உள்ளன. தானியங்கி மற்றும் சிங்கிள் முறைகளில் சுடும் வசதியும் இருக்கிறது.

ராணுவத்தின் பொதுப்பணியாளர் தரத் தேவைகளின் (GSQR) படி, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகளின் செயல்பாட்டுத் தேவைகளை மனதில் கொண்டு 'உக்ரம்' துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரைபிள் 100 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிர்காலம், கடுமையான வெப்பம் மற்றும் நீருக்கடியில் இதன் செயல்பாட்டு திறன் சோதிக்கப்படும்.

1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது அறிமுகமான, இன்னும் பயன்பாட்டில் உள்ள பழைய INSAS துப்பாக்கியை மாற்றுவதற்காக இந்த உக்ரம் துப்பாக்கி கொள்முதல் செய்யப்படுகிறது.

Tags :
Advertisement