Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திராவிடம் vs தமிழ்நாடு - வேறுபாடு என்ன?

10:55 AM Nov 04, 2024 IST | Web Editor
Advertisement

திராவிட கருத்தியலா தமிழ்தேசிய கருத்தியலா என்கிற விவாதம் தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. திராவிடத்திற்கும் தமிழ்தேசியத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

Advertisement

நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு வந்த பிறகு, திராவிடமும் தமிழ்தேசியமும் இரு கண்கள் என தனது கொள்கை நிலைபாட்டை அறிவித்தார். அதன் பின் தமிழ் தேசியம் வேறு திராவிடம் வேறு என்கிற விவாதம் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கி இருக்கிறது. ஒன்றுக்கொன்று எதிர் எதிர் நிலையில் இருக்கும் இந்த இரு கருத்தியலும் ஒரே நிலைபாட்டில் முன்னிறுத்தியவர் அயோத்தியதாச பண்டிதர்.

திராவிடம் என்றதும் தற்போதைய அரசியல் சூழலில் அனைவரின் நினைவுக்கும் வருவது பெரியார்தான். ஆனால் உண்மையில் திராவிடன்', 'தமிழன்' என்கிற இந்த இரண்டு அரசியல் அடையாளச் சொற்களை ஒரு பைசா தமிழன் இதழ் மூலமாக தமிழ்நாட்டுக்கு அளித்தவர் பண்டிதர் அயோத்திதாசர்.

தமிழ்பேசும் சமூகங்கள் ஓர் ஒற்றை பொது அடையாளத்துக்குள் வந்து விட்டால், தாங்களின் சாதி அடையாளங்களை முற்றிலும் இழக்க நேரிடும் என்கிற அச்சத்தினால், தமிழன் என்கிற அடையாளத்துக்குள் வரத் தயங்கிய காலம் அது. தமிழ்நாட்டுக்கென ஒரு பொது அடையாளம் ஏதும் முன் வைக்கப்படாத சூழலில் திராவிடர் என்கின்ற அடையாளத்தை அயோத்திதாச பண்டிதர் முன்வைத்தார்.

சாதி பேதமற்ற திராவிடர்கள் தான் தமிழர்கள் என்பது அயோத்திதாச பண்டிதரின் வரையறை. அதோடு பூர்வ தமிழ்க் குடி' என்றும் ஆதித்தமிழர்கள் என்கிற அடையாளத்தையும் முன்வைத்தார். 1887-ம் ஆண்டு தன்னுடன் பனியாற்றிய ரெவரெண்ட் ஜான் ரத்தினத்துடன் இணைந்து 'திராவிட பாண்டியன்' என்கின்ற இதழை தொடங்கியதோடு 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். பின்னாளில் அது செயல்பட முடியாமல் மறைந்தது. 1891ஆண்டு 'திராவிட மகாஜன சபை'யினைப் தொடங்கி பெரும் இயக்கமாக கட்டமைத்தார்.

திராவிடம், தமிழ்க்குடி, ஆதித்தமிழர் அடையாளங்களை ஒன்று சேர்த்து, அயோத்திதாசர் முன்னெடுத்தார். மண்ணின் மைந்தர்களாக திராவிடர்களும், சமூக அதிகாரத்தைக் உடையவர்களாகவும், ஆரியப் பண்பாட்டை கடைபிடிப்பவர்களாகவும் அன்றைய காங்கிரஸ்காரர்கள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

தனது கருத்தியல் அடித்தளத்தை, அவர் தொடங்கிய, ஒரு பைசா தமிழன், பின்னாளில், தமிழன் என்று பெயர் மாற்றப்பட்ட இதழின் வாயிலாக மிக விரிவாக அவர் உருவாக்கினார். அதன் விளைவாக பிற்காலத்தில் தமிழன் மற்றும் திராவிடம் என்கிற இரண்டு சொற்களும் அரசியல் அரங்கில் முதன்மை இடத்தைப் பிடித்தன.

மனுஸ்மிருதியில் இருந்து திராவிடம் என்கிற சொல் எடுக்கப்பட்டிருப்பதாக ஒரு கருத்து உண்டு, மனுசாஸ்த்திரம் அத்தியாயம் 10ல் ஸ்லோகம் 43, 44 ல் திராவிடம் என்கிற சொல் இடம் பெறுகிறது. அதில் சாதிக்கும், சடங்குகளுக்கும் எதிரானவர்கள், திராவிடர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அயோத்தியதாசருக்கு பிறகு பெரியார் திராவிட கருத்தியலை மிகத் தீவிரமாக மக்களிடையே கொண்டு சென்றார். எந்த ஒரு மனிதனுக்கு உயிரைவிட மானமே பெரிது, பிறப்பால் அனைவரும் சமம், உள்ளிட்ட சமூக நீதி கொள்கைகளை வகுத்தார்.

திராவிடம் குறித்து அவர் எழுதுகையில், ஆரியர் என்பதற்கான எதிர்ச் சொல்தான் திராவிடம், மனுதர்மத்தை எதிர்ப்பவர்கள் திராவிடர்கள் என்றால் நாம் திராவிடங்கள்தான் என்று அயோத்திதாச பண்டிதரும், அத்திபாக்கம் வேங்கடாசலபதியும் முன்வைத்த அதே கருத்தை பெரியாரும் 1943- ல் எழுதினார்.

பாபா சாகேப் அம்பேத்கர் தீண்ப்படாதவர்கள் யார், அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதவர்கள் ஆயினர் என்ற புத்தகத்தில் திராவிடர் குறித்து ஆய்வு பூர்வமான தகவலை வெளிப்படுத்தினார். அதில் திராவிடர் என்ற சொல், மூலச் சொல் அல்ல. தமிழ் என்ற சொல்லின் சம்ஸ்கிருத வடிவமே இந்தச் சொல் என்றும் திராவிடா’ என்ற சொல், ஒரு இன மக்களின் மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை என நிறுவினார். இந்தியா முழுவதும் தமிழ் பேசும் நாகர்கள், அதாவது திராவிடர்கள் இருந்தார்கள், என்றும் ஆரியர்களிடம் ஏற்பட்ட தொடர்பின் மூலம், வட இந்தியாவில் இருந்த நாகர்கள் தமிழை கைவிட்டுவிட்டனர் என ஆய்வுப்பூர்வமாக டாக்டர் அம்பேத்கர் விளக்கினார். தென் இந்திய நாகர்கள், தங்களது திராவிட மொழியை அதாவது தமிழை தாய்மொழியாகத் தொடர்ந்து பேசி வந்ததால் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதற்கு முழு தகுதியை பெற்றிருந்தனர் ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்.

இந்த கருத்துகளின் அடிப்படையிலும், ஆளுமைகளின் ஆய்வுகளின் அடிப்படையில், இன்றைக்கு விவாதப்பொருளாக இருக்கும் திராவிடமா தமிழ் தேசியமா என்பதில், திராவிடம் என்பது இனம் அல்ல மொழி என்றும், தமிழும் திராவிடமும் வேறு வேறு அல்ல, என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.

Tags :
dravidianideologyNews7Tamilnews7TamilUpdatesPandit AyodhitasaTamilTamilNadu
Advertisement
Next Article