Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி: 4 மாதங்களுக்குப் பின் சிக்கியது எப்படி?

10:42 AM Jul 26, 2024 IST | Web Editor
Advertisement

கணவரை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை, 4 மாதங்களுக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 57வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷ் பாஷா.
இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்த சூழலில்
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலை கவுஷ் பாஷா உடல் நலக்குறைவு காரணமாக
உயிரிழந்ததாக அவரது மனைவி ஷாஜிதா பானு உறவினர்களிடம் தெரிவித்தார்.  ஏற்கனவே அவருக்கு சர்க்கரை,  நுரையீரல் சமந்தமாக நோய் மற்றும் வலிப்பு ஆகிய பாதிப்புகள் இருந்ததாக தெரிகிறது.

கவுஷ் பாஷா உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுஷ் பாஷா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அவரின் மனைவி ஷாஜிதா பானு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "எங்கள் மத முறைப்படி பிரேத ரிசோதனை செய்ய மாட்டோம்" என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதனால் சந்தேகமடைந்த போலீசார் கவுஷ் பாஷாவின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஷாஜிதா பானுவை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.  தொடர்ந்து,  கவுஷ் பாஷாவின் மரணத்தை போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.  பிரேத பரிசோதனையில் கவுஷ் பாஷா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி ஷாஜிதா பானுவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாஜிதா பானு பாலியல் வழக்கில்
கைதாகி சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்திய
விசாரணையில் ஷாஜிதா பானு தனது கணவர் கவுஷ் பாஷாவை கழுத்தை நெரித்து
கொன்றதை ஒப்புக் கொண்டார்.  கவுஷ் பாஷாவிற்கு தோல் நோய் இருந்ததால் ஷாஜிதா பானு அவர் அருகில் செல்லமாட்டார் எனவும்  இதனால் கடந்த பிப்ரவரி மாதம் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த  ஷாஜிதா பானு தனது கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கவுஷ் பாஷாவிற்கு பேய் பிடித்ததால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஷாஜிதா பானு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
ArrestChennaiCrimedeathinvestigationPolice
Advertisement
Next Article