#BiggBoss வீட்டில் அதிரடியாக நடந்த டபுள் எவிக்சன்... வெளியேறும் 2 போட்டியாளர்கள் யார்?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதி வழங்கி வருகிறார்.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் நடிகர் ரஞ்சித் ஒருவரை தவிர சின்னத்திரை பட்டாளங்கள் களமிறங்கியது. ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த சீசன் ஆரம்பம் முதலே அதிருப்தியை கொடுத்து வந்தது.
உள்ளே நுழைந்த 18 போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கப்போகிறோம் என்று அதிரடியாக 6 வைல்ட் கார்ட் என்ட்ரியை களமிறக்கினர். ஆனால் அப்போதும் ஆட்டத்தில் எந்த ஒரு சுவாரஸ்யமும் எஞ்சவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை வீட்டில் இருந்து ரவீந்தர், தர்ஷா, அர்னவ், சுனிதா, ரியா, வர்ஷினி, சிவகுமார் என அடுத்தடுத்து குறைவான வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறினர். பொம்மை டாஸ்க், டெவில் Vs ஏஞ்சல் என்று சேலஞ்சிங்கான டாஸ்க் கொடுக்கப்பட்ட போதிலும் அதனை சுவாரஷ்யம் குறைவாக விளையாடியுள்ளனர் என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த வாரம் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். யார் அந்த 2 போட்டியாளர்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் படி, பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி வெளியேற்றப்பட்டுள்ளனர்.