For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் டோவினோ தாமஸின் #ARM படம்!... இத்தனை கோடி வசூலா?

01:20 PM Sep 24, 2024 IST | Web Editor
பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் டோவினோ தாமஸின்  arm படம்      இத்தனை கோடி வசூலா
Advertisement

ஏஆர்எம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை நெறுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளாது.

Advertisement

"மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த டோவினோ தாமஸ், அஜயந்தே ரண்டம் மோஷனம் (ARM) படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார். இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றது.

இந்த ஃபேண்டஸி த்ரில்லர் படம் டோவினோ தாமஸ் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளது. ARM படத்தில் டோவினோ தாமஸ் குஞ்சிக்கெழு, மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் நடத்தைகளுடன் சித்தரிக்கப்படுகிறது, மேலும் அவரது அழுத்தமான திரை ஈர்ப்பு மற்றும் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது, குறிப்பாக அவரது உணர்ச்சிகரமான நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளியான அனைத்து மொழிகளிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 151.87K டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ள இப்படம், அதன் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் சாதனைகளை முறியடித்து வருகிறது.

4வது நாளில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனையாகியுள்ளன. டோவினோ தாமஸின் அதிரடி மற்றும் ஃபேன்டஸி த்ரில்லரைக் காண பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மிகச்சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில், ஏஆர்எம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது.

Tags :
Advertisement