“இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்!” - தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு!
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். ஆனால், சமீபத்தில் அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.