For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TNLocalbodyElection: வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம்!

09:57 AM Aug 20, 2024 IST | Web Editor
 tnlocalbodyelection  வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

Advertisement

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, இன்று (ஆக. 20) முதல் தொடங்கப்படவுள்ளது.

வரும் அக்டோபர் 18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையேயான முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை உத்தேசமாக மறுசீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணியின் போது, வீட்டுக்கு வரும் அலுவலர்களிடம் அளிக்கப்படும் விவரங்கள், உரிய செயலியில் பதிவு செய்யப்பட்டு, சரிபார்க்கப்படும்.

இதனையடுத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 29-ம் தேதியில் இருந்து நவம்பர் 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement