Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம்”- தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி!

அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
07:32 PM Aug 18, 2025 IST | Web Editor
அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிமுகப்படுத் தப்பட்டு உள்ளார். வேட்பாளர் அல்ல அவர் துணை குடியரசு தலைவர் தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மையான வாக்குகள் இருக்கிறது.

சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தை சார்ந்தவர். கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் அவருக்கு ஆதரவு தர வேண்டும். அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் திமுக மற்றும் கட்சிகள் மாபெரும் குற்றத்தை செய்தன. இந்த முறை அதுப்போல் செய்ய கூடாது.  சிபி ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்.க்காரர் அவரை ஆதரிக்க  மாட்டோம் என்று சொல்வது எப்படி என தெரியவில்லை. அவர் ஊழல்வாதி கிடையாது.

திமுகவில் 7 அமைச்சர்கள் மீது ஊழல் குற்ற்ச்சாட்டுகள் இருக்கிறது. தமிழ்நாட்டை சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக  ஆதரவு தர வேண்டும். இல்லை என்றால் திமுகவின் தமிழ் பற்று என்ற வேஷம் கலைந்து விடும். சிபி ராதாகிருஷ்ணன் நல்ல தலைவர். திறமையானவர். அரசியலமைப்பு சட்டம் தெரிந்தவர். 2 முறை எம்.பியாக இருந்து உள்ளர். ஆளுநராக இருந்து உள்ளார். இதை விட தகுதியானவர் யார் இருக்கிறார்கள்.

செல்வ பெருந்தகைக்கு என்ன பிரச்சனை.? தமிழை மதிக்க கற்று கொள்ளுங்கள்.
ப.சிதம்பரம் என்ன செய்தார் என பட்டியலிட முடியுமா..? சென்னை, தூத்துக்குடி,
திருச்சி விமான நிலையங்கள், பிரதமரால் விரிவுப்படுத்தப்பட்டன. தூத்துக்குடி
துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டதால் தான் கார் தொழிற்சாலை வந்தது. 20 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருந்த போது என்ன
செய்தார்கள் என்று பட்டியலிட முடியுமா..? மத்தியில் பா. ஜ.க். ஆட்சியில்
தமிழ்கத்திற்கு ரூ.10 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதி செய்து தந்து உள்ளோம்.
கட்சி சார்புடையவராக இருந்தாலும் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்ப்ட்டதும் கட்சி சார்பில்லாதவராகி விடுவார்” என்று கூறினார்.

Tags :
abjBJPcpradhakrishnandmk.IndiaNewsndaalliencetamilisaisounderrajanvicepresidentcandidate
Advertisement
Next Article