For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்" - அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை

07:26 AM Dec 06, 2023 IST | Web Editor
 அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்    அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை
Advertisement

"அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்" என  அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாள்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. மழை குறைந்ததால் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இன்றும் ஆவின் பால் இலவசமாக தரப்படும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தார். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்கான பணியில் அதிகளவில் மீனவர்களின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்ட  உணவுப் பொருட்களை பொதுமக்கள் பேரிடர் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாடு கருதி தேவைக்கு அதிகமாகவே வாங்கி குவித்து வருகின்றன. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.  நிலமை நன்கு சீரடைந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்.” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement