For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அநியாயம் பண்ணாதீங்க... சிறப்பான அப்டேட் சீக்கிரம் வரும்...” - வெங்கட் பிரபு பதிவு!

07:50 AM Mar 26, 2024 IST | Jeni
“அநியாயம் பண்ணாதீங்க    சிறப்பான அப்டேட் சீக்கிரம் வரும்   ”   வெங்கட் பிரபு பதிவு
Advertisement

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘The G.O.A.T.’ திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று அப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும், அதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.தென்னாப்பிரிக்கா, பேங்காக் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளாவிலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கிற்காக சென்ற விஜய்க்கு, கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலானது. நடிகர் விஜய்யும் தனது சமூக ஊடக பக்கங்களில் அந்த வீடியோக்களை பகிர்ந்திருந்தார்.

இதையும் படியுங்கள் : வெற்றிக் கணக்கை தொடங்கியது ஆர்சிபி - பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி

இதனிடையே, ‘The Greatest of All Time’ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது X தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அநியாயம் பண்ணாதீங்க... அப்டேட் மிக விரைவில் நண்பா நண்பீஸ்... என்ன நம்புங்க, அது சிறப்பான அப்டேட்டா இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags :
Advertisement