For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அன்னதானம் - தவெக அறிக்கை!

10:29 AM May 26, 2024 IST | Web Editor
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அன்னதானம்   தவெக அறிக்கை
Advertisement

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க கட்சி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement