For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#DominicandtheLadiespurse | வெளியானது கௌதம் மேனன்- மம்மூட்டி படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

11:50 AM Sep 07, 2024 IST | Web Editor
 dominicandtheladiespurse   வெளியானது கௌதம் மேனன்  மம்மூட்டி படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்
Advertisement

மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் படத்திற்கு 'Dominic and the Ladies' purse' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பை விநாயகர் சதுர்த்தியான இன்று படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது உருவாக உள்ள திரைபடம் குறித்த முக்கிய அறிவிப்பு தான் தற்போது வெளியாகி உள்ளது.

கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை வைத்து பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனன் படம் இயக்கப் போவதாக திரை வட்டாரங்களில் கிசுகிசுக்க பட்ட நிலையில் கொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சத்தமின்றி நடைபெற்றது.

கௌதம் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படமான இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்மூட்டியே தயாரிக்க உள்ளார் .

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று இந்த படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது . அதன்படி ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகும் இந்த படத்திற்கு ‘Dominic and the Ladies’ purse’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement