பிரதமர் மோடி ரூ.2700 கோடி செலவில் கட்டப்பட்ட அரண்மனையில் வசிக்கிறாரா?
This News Fact Checked by ‘Boom’
ரூ.2700 கோடி மதிப்புள்ள அரண்மனையில் பிரதமர் மோடி வசிப்பதாகவும், விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடி அரண்மனை இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது. படத்தில், பிரதமர் மோடி ஒரு விலைமிகுந்த கடிகாரம் அணிந்திருப்பதை காணலாம். அவருக்குப் பின்னால் பல ஆடம்பரமான பொருட்கள் ஒரு ஷோகேஸில் வைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற பல ஆடம்பர பொருட்கள் இருக்கும் பிரதமர் இல்லத்தின் படம் இது என்று ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். வைரல் படம் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் உருவாக்கப்பட்டதா BOOM உண்மைச் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்துக்கு இடையே, ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. ஒருபுறம், ஷீஷ்மஹால் விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக குறிவைக்கிறது. மறுபுறம், பிரதமர் ரூ.2700 கோடி செலவு செய்து அரண்மனை கட்டியதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ட்விட்டர் (எக்ஸ்) இல் இந்த படத்தை பகிர்ந்துள்ள AAP ஆதரவாளர் @AAPkaRamGupta, “அரவிந்த் கெஜ்ரிவால் கட்டிய பள்ளியில் தனது குழந்தைகளை படிக்க வைக்கும் பிரதமர் இல்லத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் ரகசியமாக இந்தப் படத்தை அனுப்பியுள்ளார். இன்று மதியம் 3 மணியளவில் இந்த கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதை ரகசியமாக படம் எடுத்துள்ளார். மேலும், அரண்மனையில், விலையுயர்ந்த ஆடம்பர உடைகள், காலணிகள், கண்ணாடிகள், பேனாக்கள் மற்றும் இன்னபிற பொருட்களுக்காக தனி அறைகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். 2,700 கோடி செலவு செய்தால் ஒன்றும் செய்ய முடியாது தம்பி.” என பதிவிட்டுள்ளார். (காப்பக இணைப்பு)
இதேபோல், மற்றொரு ட்விட்டர் பயனரும், ஆம் ஆத்மி ஆதரவாளருமான @harishprasad81 வைரலான படத்தை பதிவிட்டு, “வாருங்கள், இது மதியம் 3 மணி, இந்த கடிகாரத்தை அணிய வேண்டிய நேரம் இது” என பகிர்ந்துள்ளார். (காப்பக இணைப்பு)
உண்மை சோதனை:
வைரலான புகைப்படம் தொடர்பான முக்கிய வார்த்தைகளை தேடியபோது, கூகுளில் அது தொடர்பான நம்பகமான அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர், வைரலான படத்தை கவனமாகப் பார்த்தபோது, கீழ் வலது மூலையில் க்ரோக் AI இன் வாட்டர்மார்க் இருப்பது தெரியவந்தது. படம் AI உருவாக்கியது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
பிரதமர் மோடியின் கண்ணாடியின் சட்டகம் முழுமையடையாதது மற்றும் அவரது கை விரல்களும் சிதைந்து இருப்பது போன்ற சில முரண்பாடுகள் வைரலான புகைப்படத்தில் காணப்பட்டன.
AI கண்டறியும் கருவி ஹைவ் மாடரேஷனில் வைரல் படம் ஆராயப்பட்டது. அதிலும் AI-உருவாக்கப்படுவதற்கான நிகழ்தகவு 98.5% எனக் கூறப்பட்டது. இதன்மூலம் வைரலான புகைப்படம் போலியானது அல்லது எடிட் செய்யப்பட்டது என நிருபிக்கப்பட்டது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.