கோடை காலத்தில் அடிக்கடி அஜீரண கோளாறு? இந்த உணவுகளை சேர்த்து எடுத்துக்காதீங்க!
04:39 PM May 04, 2024 IST | Web Editor
Advertisement
கோடை காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னைகளை தவிர்க்க என்னென்ன உணவுகளை சேர்த்து எடுத்துக் கொள்ள கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.
Advertisement
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.
கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சில உணவுகளை சேர்த்து எடுத்துக் கொண்டாலும் நமக்கு பிரச்னை ஏற்படுகிறது. அந்த வகையில், எந்தெந்த உணவுகளை சேர்த்து எடுத்துக் கொள்ள கூடாது என்பது பற்றி பார்க்கலாம்.
- கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவுகளில் ஒன்று தர்பூசணி. இது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவிகிறது. இருப்பினும் தர்பூசணி பழத்தை பால் பொருட்களோடு சேர்த்து சாப்பிட கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்டால் வயிறு உப்புசம், அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- மாவுச்சத்து கொண்ட உணவுகளோடு அசிடிக் உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்படும். கோடை காலத்தில் சிலர் அதிகமாக சாலடுகளை எடுத்துக்கொள்வர். கூடுதல் சுவைக்காக இந்த சாலடின் மேல் வினிகர் அல்லது சிட்ரஸ் பழ ஜூஸ்களை சேர்ப்பார்கள். இதனால் செரிமான கோளாறு ஏற்படும். இவற்றை தவிர்ப்பது நல்லது.
- அதிக புரதம் நிறைந்த உணவுகளுடன் பழங்களை சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதன்படி, யோகர்ட் அல்லது சீஸ் போன்ற அதிக புரத உணவுகளோடு பழங்கள் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழங்களில் இயற்கையாக சர்க்கரை உள்ளதால் இவை உடனடியாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் புரத உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது வயிறு உப்புசம் மற்றும் அசௌகர்யம் ஏற்படுகிறது.
- கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க குளிர் பானம் பருகுவது வழக்கம். ஆனால் உணவு சாப்பிடும் போது இடையில் குளிர்பானம் எடுத்துக் கொள்வது செரிமானத்தை பாதிக்கும். இதற்கு பதிலாக சூடான பானங்களை பருகலாம்.
- இனிப்பு நிறைந்த பழங்களோடு அசிடிக் பழங்களை சாப்பிடுவதாலும் செரிமான கோளாறு ஏற்படும். வாழைப்பழம் போன்ற இனிப்பான பழங்களோடு ஆரஞ்சு, அன்னாசி போன்ற அசிடிக் பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.