For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'GOAT' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற நிறுவனம் எது தெரியுமா?

03:34 PM Feb 29, 2024 IST | Web Editor
 goat  திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற நிறுவனம் எது தெரியுமா
Advertisement

GOAT திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த், வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது.  Greatest Of All Time திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா,  மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில் இத்திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா,  பேங்காக்,  புதுச்சேரி,  சென்னை என பல இடங்களில் நடைபெற்று வந்தது.  இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்க உள்ளதால் படக்குழு விரைவில் ரஷ்யா செல்ல உள்ளனர்.  இந்நிலையில்,  இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement