Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#PriyankaGandhi சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

10:21 AM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி நேற்று (அக்.23) பேரணியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

Tags :
by electionCongressKeralanews7 tamilpriyanka gandhiWayanadWayanad By Election
Advertisement
Next Article