“போனா வராது பொழுது போனா கிடைக்காது...” பிரபல ஹாலிவுட் நடிகையின் குளியல் நீரில் சோப்... ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியை ஒரு நடிகையாக, ஃபிஃப்டி-ஃபிஃப்டி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராக நாம் அறிந்திருப்போம். ஆனால் இப்போது அவர் ஒரு புதிய அத்தியாத்தை எடுத்துள்ளார். ஆண்களுக்கான சோப்புகளை தயாரிக்கும் டாக்டர் ஸ்குவாட்ச் நிறுவனத்துடன் இணைந்து, சோப்புகளை தயாரிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட்டே இருக்கு. அது என்னவென்றால், அவர் அறிமுகப்படுத்த உள்ள சோப்புகள், அவரின் குளியல் நீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் மூலம் இதனை அவர் அறிவித்துள்ளார். அந்தப் பதிவில்,
“டாக்டர் ஸ்குவாட்ச் விளம்பரத்திற்கு பிறகு, எனது குளியல் நீர் குறித்து அனைவரும் கேட்டீர்கள். ‘சிட்னி பேத்வேர் பிளிஸ்’ சோப்பை அறிமுகப்படுத்துகிறோம். எனது குளியல் நீரினால் ஆன உண்மையான, முதற்கட்டமாக குறைந்த அளவிலான சோப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். இந்த சோப்புகள் ஜூன்.6ல் இருந்து drsquatch.com கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
ஒரு சோப்பின் விலை எவ்வளவு?
ஒரு சோப்பின் விலை $8 எட்டு டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.685. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பு 100 வாடிக்கையாளர்கள் போட்டியின் மூலமும் சோப்பை வெல்லலாம் என தெரிவித்துள்ளனர். அதற்கு, டாக்டர் ஸ்குவாட்ச் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்து, அதில் ஒரு கமெண்ட் செய்ய வேண்டுமாம். அப்படி முதலில் கமெண்ட் செய்யும் நூறு பேருக்கு சோப்பு வழங்கப்படுமாம். அல்லது ஜூன் 4ம் தேதிக்குள் டாக்டர் ஸ்குவாட்ச்-ன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாமாம்.
முதற்கட்டமாக 5,000 சோப்புகள் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
சோப்பில் என்னவெல்லாம் இருக்கும்?
பைன் மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருள்களுடனான கலவையுடன் சிட்னி குளித்த நீர்த்துளிகளையும் சேர்த்து சோப்பு தயாரிக்கப்படும்.