ஒரு வார முடிவில் ’காந்தாரா சாப்டர் 1' படம் செய்த மொத்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா?
‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
03:41 PM Oct 10, 2025 IST | Web Editor
Advertisement
கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவானது. இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார்.
Advertisement
மேலும் படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘காந்தாரா சாப்டர் 1’ தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த அக்.2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி ஒருவாரத்தை கடந்துள்ள நிலையில் காந்தாரா சாப்டர் 1 உலகளவில் ரூ 509.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.