தன்திரயோதசி முதல் பாய் தூஜ் வரை - 5 நாட்களுக்கு தீபாவளியை கொண்டாடும் மாநிலங்கள் பற்றி தெரியுமா..?
இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 12ம் தேதி தீபாவாளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களில் தீபாவளி 5 நாட்களுக்கு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தன்திரயோதசி, நரகா சதுர்தசி, லக்ஷ்மி பூஜை, கோவர்தன் பூஜை மற்றும் பாய் தூஜ் என 5 நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அதில் முதல் நாளான தன்திரயோதசி நாளில் செல்வத்தின் கடவுளான குபேரனுடன் லட்சுமி தேவியை வழிபாடு செய்வார்கள். மேலும் இந்த நாட்களில் மகா லட்சுமி, சரஸ்வதி தேவி, மகா காளி ஆகிய மூன்று தேவிகளையும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
தன்திரயோதசி என்பது கார்த்திகை மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய 13 வது நாளான திரயோதசி நாளில் கொண்டாடப்படும். 2023 ஆம் ஆண்டில், நவம்பர் 10 ஆம் தேதி தன்திரயோதசி வருகிறது, இது ஐந்து நாள் தீபாவளி பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இந்த புனித நாளில், மக்கள் பாரம்பரியமாக செழிப்பையும் மற்றும் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய பல்வேறு பொருட்களை வாங்குவது வழக்கமாகும். மேலும் இது தங்கம் மற்றும் வெள்ளி, புதிய பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்:இலங்கை சிறையிலிருந்து 38 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை!
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில் தன்திரயோதசி பண்டிகை தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தன்திரயோதசி அனுசரிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தன்திரயோதசியொட்டி கொல்கத்தாவில் மாலை 05:13 முதல் 07:11 வரை, மும்பையில் மாலை 06:20 முதல் 08:20 வரை, பெங்களூருவில் மாலை 06:10 முதல் 08:13 வரை, சென்னையில் மாலை 06.00 முதல் 08.00 வரை,டெல்லியில் மாலை 05.47 முதல் 07.43 வரையில் பூஜை செய்யப்படும்.