உஷார் மக்களே; ஓர் அணியில் தமிழ்நாடு இல்லை; அது உறுப்பினர் சேர்க்கை டீம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டு
வருகிறார்.
திருவாரூர் மாவட்ட பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்ற கற்பனை உலகத்தில் மு.க. ஸ்டாலின் இருந்து கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்ல சூப்பர் முதலமைச்சர் என்கிறார் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குற மாநிலம் தமிழ்நாடு தான் எல்லா துறைகளிலும் கடன் வாங்குகிறார் குழந்தைகள் பிறக்கும் போதே கடனாளியாக பிறக்கின்றன யார் இந்த கடனை எல்லாம் அடைப்பார்.
அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகளில் வெல்வோம் என்கிறாரே, உங்கள் பதில் என்ன? என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி திமுக. திமுக கட்சியில் உறுப்பினர்களும் குறைந்து விட்டார்கள்.
அதனால் ஓர் அணியில் தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு ஊர் ஊராக சென்று, வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கிறார்கள். ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக வருகிறார்கள். இன்றைய தினம் திமுக-வின் நிலை பரிதாபமான நிலைக்கு வந்துள்ளது.
கதவை தட்டி.. தட்டி.. தாயே.. எங்க கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்ற நிலை திமுகவுக்கு வந்துவிட்டது. திமுக-வுக்கு ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்ற நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல நலிவடைந்து மக்களுடைய கதவை தட்டி உறுப்பினர்களை சேர்க்கின்ற அளவிற்கு தாழ்ந்து போய்விட்டது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.