”அதிமுக ஆட்சியின் திட்டங்களை திறந்ததே திமுகவின் சாதனை” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
அதிமுக பொதுசெயலளர் எடப்பாடி பழனிசாமி கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
”திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டும் என்ற திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அதிமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டுவரப்படவில்லை என்ற பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்ற முடியாது அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் முடிவுற்ற பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது தான் திமுக அரசின் சாதனை.
இன்று சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. இன்று தமிழகத்தில் கொலை கொள்ளை திருட்டு பாலியல் பிரச்சனை நடக்காத நாளே இல்லை. திமுக ஆட்சி அமைந்த உடன் ஒரே ஆண்டில் தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துவிட்டது.
திமுக ஆட்சியில் போலீசுக்கு பாதுகாப்பு இல்லை. ஆறு மாதத்தில் ஆறு காவலர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கும்போது மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது. அதிமுக ஆட்சி வந்தவுடன் சட்டத்தின் ஆட்சி நடைபெறும். எந்த இடத்தில் போதை பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் ஆரம்ப காலகட்டத்தில் முதியோர் கொலையை தடுத்திருக்கலாம். ஆனால் இந்த அரசு நடவடிக்கையை எடுக்காத காரணத்தினால் முதியோர் குறி வைத்து கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி அல்ல. கார்ப்பரேட் கம்பெனியாக மாறி கொண்டு இருக்கிறது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அடுத்த ஸ்டாலின் இருக்கிறார். உதயநிதி தற்போது வர துடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இன்ப நிதி வருவார். ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட எம்எல்ஏ ஆகலாம் மந்திரி ஆகலாம் முதலமைச்சராக கூட ஆகலாம்.
திமுக ஆட்சியில் யாரும் வீடு கட்ட முடியாது. அந்த எண்ணமும் நமது மனதில் வராது வீடு கட்ட வேண்டும் என்றால் கனவில் கட்டி மகிழ்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நிஜத்தில் கட்ட முடியாது. கோவையில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை ஒருவர் வீல் சேர் இன்று தந்தையை எழுத்து சென்றார். இதனால் ஏழைகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்ற பொழுது அவர்கள் அங்கே நடந்த செல்ல முடியாத ஒரு சூழ்நிலை இந்த அவல நிலை இந்த ஆட்சியில் தொடர்கிறது”
என்று தெரிவித்தார்.