Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திமுகவுக்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கும்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுகவுக்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
03:28 PM Apr 14, 2025 IST | Web Editor
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டான் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து கூறவில்லை என  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சித்திரை 1 அன்று மெளன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்! தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதலமைச்சரை, தமிழ்நாடு புறக்கணிக்கும்!

ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நண்பகல் கடந்தும் நமது தமிழ்நாடு மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.

மேலும், இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் “ஆவின்" பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை. ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதலமைச்சருக்கு. ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?

தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கட்சி திமுக என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்”

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPDMKMKStalinnainar nagendrantamil new year
Advertisement
Next Article