"2026 தேர்தலில் திமுகவிற்கு முடிவு கட்டபடும்" - எடப்பாடி பழனிசாமி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது என்.ஜி.ஆர் சாலையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, "அடுத்து திமுக ஆட்சி தான் என கூறி வருகிறார். அதிமுக வெற்றிக்கு
பல்லடத்தில் கூடிய கூட்டமே சாட்சி . நீங்கள் எத்தனை கூட்டணி அமைத்தாலும் நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலை பொறுத்தவரையில் நீங்கள் சரியான தீர்ப்பை வழங்குவீர்கள் என நம்பிக்கை உள்ளது.
எல்லா துறையிலும் ஊழல் உள்ளது. ஊழல் நிறைந்த அரசை அகற்ற வேண்டும். 10 ரூபாய் என்றால் யார் நியாபகம் வரும். செந்தில் பாலாஜி தான். 4 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. உடல் உறுப்பை திருடி வருகின்றனர். திமுகவினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றவர்கள் உங்கள் உறுப்புகள் எல்லாம் இருக்கிறதா என சோதனை செய்து கொள்ளுங்கள்.
அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து விட்டார்கள் என ஸ்டாலின் சொல்லி வருகிறார். 1999ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார்கள் முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார். அப்போது மோசமான கட்சியாக தெரியவில்லை. அதிமுக கூட்டணி என்றதும் பாஜக மோசமான கட்சி என சொல்கிறீர்களே. அவதூறு செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயற்சித்து வருகின்றனர். யார் கூட்டணி என்றாலும். கொள்கையின் படி தான் நடக்கும். ஸ்டாலின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்து விட்டார்கள் இனி ஏமாற மாட்டார்கள். இது திமுகவிற்கு முடிவு கட்டும் தேர்தல்" என தெரிவித்துள்ளார்.