திமுக - விசிக தொகுதிப் பங்கீடு: நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!
திமுக-விசிகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நாளை (மார்ச் 6) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக-விசிகவிற்கு இடையேயான 2ம் கட்ட பேச்சு வார்த்தை நாளை (மார்ச் 6) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக தொடர்ந்து 2 தனி தொகுதியும், 1 பொது தொகுதியும் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக 2 தனி தொகுதிகளை மட்டுமே தர முன்வந்துள்ளதால் இழுபடி நீடிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி 12-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.