For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போதை பொருள் கடத்தலுக்கு துணை நிற்கும் தி.மு.க. அவற்றை எப்படி தடுக்கும்? -இபிஎஸ் காட்டம்!

09:42 PM Mar 28, 2024 IST | Web Editor
போதை பொருள் கடத்தலுக்கு துணை நிற்கும் தி மு க  அவற்றை எப்படி தடுக்கும்   இபிஎஸ் காட்டம்
Advertisement

போதை பொருள் கடத்தலுக்கு துணை நிற்கும் தி.மு.க. அவற்றை எப்படி தடுக்கும் என இபிஎஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். 

Advertisement

அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று (மார்ச் 28) பிரச்சாரம் செய்தார்.

கடந்த 24ம் தேதி முதல் சேலத்திலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில், தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து சிவகாசி பாவாடிதோப்பு திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ராஜேந்திர பாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க.வே துணை நிற்கும் நிலையில், அவற்றை தி.மு.க. அரசு எப்படி தடுக்கும்? நல்லாட்சி நடத்துவதற்காக தி.மு.க.விடம் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தார்கள். எங்கள் மீது வழக்கு போடுவதற்காக அல்ல. போதைபொருள் கடத்தலுக்குதான் தி.மு.க. அயலக அணியை அமைத்திருக்குமோ என சந்தேகம் உள்ளது.

தனது கட்சிக்காரர்கள் என்ன அட்டுழியம் செய்வார்கள் என்பதை ஸ்டாலினே பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்து அழ வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது" என்றார்.

மேலும்,  அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக உழைப்பதைவிட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக கூடுதலா உழைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement