சுவீடனில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மயங்கி விழுந்த சுகாதாரத்துறை அமைச்சர்!
சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக எலிசபெத் லான்(வயது 48) நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், துணை பிரதமர் எப்பா புஷ் மற்றும் எலிசபெத் லான் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் எலிசபெத் லான் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். தன்னை தொடர்ந்து துணை பிரதமர் எப்பா புஷ் உள்பட, அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் எலிசபெத்திற்கு உதவி செய்துள்ளனர்.
இதையடுத்து அவரை அங்கிருந்து வெளியே அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை வழங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் எலிசபெத் லான் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் தனக்கு தீடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் சுவீடனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.