Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மாணவியின் மரணத்திற்கு திமுக தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்" - இபிஎஸ் கண்டனம்!

11:51 AM Mar 03, 2025 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டார். நீட் தேர்வெழுத 2வது ஆண்டாக பயிற்சிமேற்கொண்டு வந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாணவியின் மரணத்திற்கு திமுக அரசுதான்  முழுப்பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

"விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட திமுகவின் நீட் ரகசிய அரசியல் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு திமுக அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த திமுக அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

அந்த நீட் ரகசியத்தை உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" 

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAIADMKDMKedappadi palaniswamiEPSnews7 tamilNews7 Tamil Updatestamil naduTN Govt
Advertisement
Next Article