For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கு "சன்சத் ரத்னா" விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்களுக்கு 'சன்சத் ரத்னா' விருது வழங்கப்பட்டது.
04:40 PM Jul 26, 2025 IST | Web Editor
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்களுக்கு 'சன்சத் ரத்னா' விருது வழங்கப்பட்டது.
திமுக எம் பி  சி என் அண்ணாதுரைக்கு  சன்சத் ரத்னா  விருது
Advertisement

நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் "சன்சத் ரத்னா" விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை சார்பில் 2025ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுகள் தலைநகர் டெல்லியில் இன்று வழங்கப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார். அப்போது 16 மற்றும் 17வது மக்களவை பதவி காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கும் மேலும் 18வது மக்களவையிலும் தங்கள் சிறந்த செயல்திறனை தொடர்வதற்காக என்.கே. பிரேமச்சந்திரன் (ஆர்எஸ்பி, கேரளா), சுப்ரியா சுலே (என்சிபி எஸ்பி, மகாராஷ்டிரா), ஸ்ரீரங் அப்பா பார்னே (சிவசேனா, மகாராஷ்டிரா) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் சி.என். அண்ணாதுரை (திமுக), ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவ சேனா UBT), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவ சேனா), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கர்னி (பாஜக), பிரவீன் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), பித்யுத் பரன் மஹதோ (பாஜக), பி.பி. சவுத்ரி (பாஜக), மதன் ரத்தோர் (பாஜக), மற்றும் திலீப் சைகியா (பாஜக) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பாக செயல்பட்டதற்கான விருது வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, "தமிழகத்தில் சார்பில் "சன்சத் ரத்னா" விருதை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக பெற்றதில் மகிழ்ச்சியடைவதாகவும், இவ்விருதை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்க்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் விருதை வழங்கிய பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் திருவண்ணாமலை தொகுதி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து எனது தொகுதி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என உறுதியளிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசியவர், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்கும் வரை முக்கிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement